மேற்கு சுவிட்சர்லாந்தில் அதிகரிக்கும் ஓன்லைன் மோசடி

Report Print Athavan in சுவிற்சர்லாந்து

மேற்கு சுவிட்சர்லாந்தில் மோசடி நபர்கள் சிலர் உரிய பணம் செலுத்தாமலேயே ஓன்லைனில் விற்கப்படும் பொருட்களை முறைகேடாக வாங்கும் போக்கு அதிகரித்துள்ளது.

சாதாரணமாக ஒரு நபர் ஓன்லைனில் தனக்கு பிடித்த பொருட்களை ஆர்டர் செய்த பின்னர் அந்த பொருட்களுக்கு உண்டான உரிய விலையை ஓன்லைனிலேயே செலுத்திவிடுகிறார்கள்.

குறித்த நிறுவனமும் ஆர்டர் செய்தவரின் முகவரிக்கு பொருட்களை கொண்டு சேர்க்கும்.

ஆனால் சில மோசடி நபர்கள் பொருட்களை குறித்த முகவரிக்கு விநியோகம் செய்யும் நேரத்தை சரியாக அறிந்த பின்னர் அதில் உள்ள உண்மையான முகவரியை மறைத்து விட்டு போலியான முகவரியை முறைகேடாக ஆன்லைனில் மாற்றம் செய்து பதிவேற்றிவிடுகின்றனர்.

இதன் காரணமாக பணம் செலுத்தி ஆர்டர் செய்தவருக்கு விநியோகிக்க வேண்டிய பொருட்களை மோசடி நபர்கள் மாற்றி அமைத்த போலி முகவரிக்கு விநியோகம் செய்யும் போக்கு மேற்கு சுவிட்சர்லாந்தில் அதிகரித்துள்ளது.

இதனால் பணம் செலுத்தியவர்களுக்கு நியாயமாக கிடைக்ககூடிய பொருட்களை கிடைக்காமல் செய்து மோசடியான முறையில் சிலர் பொருட்களை முறைகேடாக கைப்பற்றுகின்றனர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ரோமண்டீ எனும் நுகர்வோர் கூட்டமைப்பு, ஆர்டர் செய்தவரின் முகவரியை உறுதி செய்துகொள்ள இனி அவர்களின் தொலைபேசி எண்களையும் ஓன்லைன் நிறுவனங்கள் அவசியம் கேட்டு பெற வேண்டும்.

பொருட்களை விநியோகம் செய்யும் போது கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டால் தான் இத்தகைய மோசடிகளில் இருந்து நுகர்வோர்களை தற்காத்துகொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்