ஜேர்மனி கோடீஸ்வரர் இன்னும் உயிருடன் இருக்கலாம்: சுவிஸ் மீட்புக் குழுவினர்

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

ஆல்ப்ஸ் மலைகளில் பனிச்சறுக்கு விளையாடப்போய் காணாமல் போன ஜேர்மனி கோடீஸ்வரரான Karl-Erivan Haub இன்னும் உயிருடன் இருக்கலாம் என்று சுவிஸ் மீட்புக் குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

என்றாலும் உயிருடன் அவரை மீட்பதற்கான வாய்ப்புகள் குறைந்து கொண்டே வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tengelmann என்னும் மாபெரும் வீட்டு உபயோக வர்த்தக சாம்ராஜ்யத்தின் வாரிசான Karl-Erivan Haub (58), கடந்த சனிக்கிழமை பனிச்சறுக்கு பந்தயத்திற்கான பயிற்சியில் ஈடுபட்டிருக்கும்போது சுவிட்சர்லாந்தின் Matterhorn பகுதியில் காணாமல் போனார்.

அவர் காணாமல் போன தகவல் வந்ததும் உடனடியாக 60 பேர் அடங்கிய மூன்று குழுக்கள் வான் வழியாகவும் தரை வழியாகவும் தேடுதல் வேட்டையைத் தொடங்கின.

அவர் எந்த இடத்தில் காணாமல் போனார் என்று சரியாக தெரியாததாலும், மோசமான வானிலையின் காரணமாகவும் தேடுதல் வேட்டையில் தொய்வு ஏற்பட்டது.

என்றாலும் அவரை மீட்பதற்கான வாய்ப்பு இன்னும் இருப்பதாக சுவிஸ் மீட்புக் குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Washington இல் பிறந்த Karl-Erivan 2000 ஆம் ஆண்டு முதல் Tengelmann ஐ நடத்திக்கொண்டு வருகிறார், அவர் 3 பில்லியன் யூரோக்களுக்கு வாரிசு என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்