வெளிநாடுகளில் அதிகரித்த சுவிஸ் சமூக பெண்கள் எண்ணிக்கை: புள்ளி விபரம்

Report Print Gokulan Gokulan in சுவிற்சர்லாந்து

சுவிஸ் குடிமக்களின் ஒரு பகுதியான சுவிஸ் அப்ராட் சமுகம் எனப்படும் சுவிட்சர்லாந்துக்கு வெளியே வசிக்கின்ற 751,800 சுவிஸ் குடிமக்களில் தற்போது ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அதில் பாதி பேர் சுவிஸின் அண்டை நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் வசிக்கின்றனர்.

கிரீஸ்ஸிலும் இத்தாலியிலும் கடந்த வியாழக்கிழமை, மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட புள்ளிவிவரங்களின்படி வெளிநாட்டில் வாழும் சுவிஸ் பெண்களின் விகிதம் கடந்த ஆண்டை விட ஒன்பது சதவிகிதமாக 54.5% ஆக அதிகரித்துள்ளது. ஆண்கள் ஆசியாவில் தெளிவான பெரும்பான்மையைக் கொண்டிருகின்றனர் என்றும் கூறுகிறது இந்த புள்ளி விபரம்.

சுவிட்சர்லாந்தின் 17.7% டோடு ஒப்பிடுகையில் வெளிநாடுகளில் வாழும் சுவிஸ் சமூகத்தில் 18 வயதுக்கும் குறைந்தவர்கள் 21.5% சதவிகிதமாக அதிகரித்துள்ளனர்.

1996களில் 540,000 பேர் என்று சுவிஸ் வெளிநாட்டில் வாழ்ந்த இந்த எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் சுமார் 12,000 பேர் என அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்