சுவிட்சர்லாந்து விமான நிலையத்திற்கு கிடைத்த கௌரவம்

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் சூரிச் விமான நிலையத்திற்கு ஐரோப்பாவின் சிறந்த விமான நிலையம் என்னும் கௌரவம் கிடைத்துள்ளது.

வாட்சுகள், சாக்லேட் முதலானவற்றிற்கு பெயர் பெற்ற சுவிட்சர்லாந்துக்கு இன்னொரு கௌரவம் சூரிச் விமான நிலையத்தினால் கிடைத்துள்ளது.

Edreams என்னும் விடுமுறை முன்பதிவு போர்ட்டல் சமீபத்தில் நடத்திய ஆய்வு ஒன்றில், சிங்கப்பூருக்கு அடுத்து சூரிச் விமான நிலையம் சிறந்த விமான நிலையமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்தில் செய்யப்பட்டுள்ள வசதிகள், நிர்வாக அமைப்பு மற்றும் திறன் ஆகியவை சூரிச் விமான நிலையத்தை பயணிகளின் விருப்பத்திற்குரியதாக மாற்றியுள்ளன.

50,000 பயணிகளுக்கிடையே நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள், சூரிச் விமான நிலையத்தை காத்திருப்போருக்கான இட வசதியில் முதலாவதாகவும் உணவிற்கு இரண்டாவதாகவும் ஷாப்பிங் செய்வதற்கு மூன்றாவதாகவும் கொண்டு வந்துள்ளன.

முதல் ஐந்து சிறந்த விமான நிலையங்களில் இஸ்தான்புல்லின் Atatürk விமான நிலையம், Copenhagen விமான நிலையம் மற்றும் சூரிச் விமான நிலையம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இதற்கிடையில் பெர்லினின் Tegel மற்றும் Schoenefeld விமான நிலையங்கள் பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்துள்ளன.

பட்டியலின் இறுதியில் வருவது Casablancaவின் Mohammed V விமான நிலையம். இது மட்டுமின்றி சூரிச் விமான நிலையம் 13.73 மில்லியன் விமான பயணிகள் பங்கு பெற்ற சர்வே ஒன்றின் அடிப்படையில் வழங்கப்படும் Skytrax world airport விருதுகள் பட்டியலில் 9 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

இதிலும் சிங்கப்பூரின் Changi விமான நிலையம் முன்னணியில் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்