கண் கூடாகத் தெரியும் புவி வெப்பமயமாதலின் விளைவு: தாவரங்கள் தரும் ஆதாரம்

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து
77Shares

உலகம் முழுவதும் முக்கிய விடயமாக பேசப்படும் புவி வெப்பமயமாதலின் விளைவு கண் கூடாகத் தெரியும் வகையில் மலையுச்சிகளுக்கு தாவரங்கள் இடம்பெயரத் தொடங்கியுள்ளதாக சுவிஸ் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

100 ஆண்டுகளுக்குமுன் மலையுச்சிகளில் வளராத தாவரங்கள் இன்று வளரத் தொடங்கியுள்ளன.

இது புவி வெப்பமயமாதலுடன் தொடர்புடையது என சுவிட்சர்லாந்து அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். சுவிட்சர்லாந்து உட்பட 11 நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள் Alps, Pyrenees, Carpathians, மற்றும் Scotland, Scandinavia நாடுகளின் மலைப்பகுதிகளில் நடத்தப்பட்ட 302 தாவர ஆய்வுகளை பகுப்பாய்வு செய்து கிடைத்த முடிவுகளை145 ஆண்டுகளுக்கு முன்னுள்ள முடிவுகளுடன் ஒப்பிட்டு நோக்கினர்.

Keystone

அவர்களது ஆய்வுகளின் முடிவில் மலையுச்சிகளில் சாதாரணமாக வளராத தாவரங்கள் அதிக அளவில் வளர்வதைக் கண்டனர்.

இது புவி வெப்பமயமாதலின் விளைவாகவே ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதாவது மலையுச்சிகளில் பொதுவாக வெப்பநிலை குறைவாக காணப்படும்.

arnica, alpine meadow grass, alpine dandelion, மற்றும் cranberry bushes போன்ற தாவரங்களால் குறைந்த வெப்பநிலையில் வளர இயலாது. அவை வெப்பத்தை விரும்பும் தாவரங்கள். தற்போது புவி வெப்பமயமாதலின் காரணமாக மலையுச்சிகளிலும் வெப்பநிலை உயர்ந்துள்ளதால் அவை இப்போது மலையுச்சிகளில் வளர்வது கண்டறியப்பட்டுள்ளது.

நமது தலைமுறையிலேயே புவி வெப்பமயமாதலின் விளைவைக் கண்ணாரக் கண்டு கொண்டிருக்கும் நாம் அதை கட்டுக்குள் கொண்டு வர என்ன செய்யப் போகிறோம் என்பதே நம் முன் நிற்கும் பெரிய கேள்வி.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்