சுவிட்சர்லாந்தில் அதிக மற்றும் குறைந்த வருமானம் கொடுக்கும் பணிகள் குறித்து தெரியவந்துள்ளது.
இது குறித்த தகவல் Lohnbuch Schweiz புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
அதன்படி, பிற நாடுகளுக்கு சென்று கொடுக்கப்பட்ட இலக்கை முடிக்கும் தூதரக அதிகாரிகளுக்கு மாதம் குறைந்தபட்சம் 13,555 பிராங்குகள் வருவானம் கிடைக்கிறது.
15 ஆண்டுகளுக்கு மேல் பணியில் இருக்கும் விமான கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளுக்கு மாதம் 13,106 பிராங்குகள் கிடைக்கும்.
மூத்த மருத்துவ ஆலோசகர்கள் 12,888 பிராங்குகள் வரை அதிக மாதம் வருவாய் பெறுவார்கள்.
டாக்ஸி ஓட்டுனர்கள் மாதம் 3200 பிராங்குகள் வரை சம்பாதிக்கும் நிலையில், உயிரியல் பூங்காவில் பணியாற்றுபவர்கள் 3500 பிராங்குகள் வரை ஊதியம் பெறுகிறார்கள்.
ரயில் நடத்துனர்கள் ஆண்டுக்கு 4,969 பிராங்குகள் என்ற குறைந்த அளவில் வருமானம் பெறுகிறார்கள்.