ஐரோப்பாவில் உள்ள விமான நிலையங்களில் மிக சிறந்தது என விமான பயணிகளால் சுவிட்சர்லாந்தின் சூரிச் விமான நிலையம் தெரிவாகியுள்ளது.
இதன் அடுத்த நிலையில் சிங்கப்பூரின் Changi விமான நிலையம் உள்ளது. சுமார் 50,000 விமான பயணிகளிடம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் இந்த முடிவு வெளியாகியுள்ளது.
சூரிச் விமான நிலையத்தை பணிகள் மிகவும் விரும்ப காரணமாக அமைந்துள்ளது அதன் காத்திருப்பு பகுதி என பெரும்பாலான பயணிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மட்டுமின்றி இங்குள்ள உணவங்களும் பயணிகளுக்கு ஏற்றவகையில் சேவை செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
3-வதாக ஷொப்பிங் வசதி என பெரும்பாலான பயணிகள் குறிப்பிட்டுள்ளனர்.
சிறந்த விமான நிலையங்கள் வரிசையில் சிங்கப்பூருக்கு அடுத்து துருக்கியின் Atatürk விமான நிலையம், Copenhagen விமான நிலையம் மற்றும் Munich விமான நிலையம் என உள்ளது.
மேலும் உலக அளவில் சிறந்த விமான நிலையங்களின் பட்டியலில் சூரிச் விமான நிலையம் 9-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.