தீவிரவாத சந்தேகத்தின் பேரில் சுவிஸிலிருந்து நாடு கடத்தப்பட்ட பெண்

Report Print Raju Raju in சுவிற்சர்லாந்து
370Shares
370Shares
lankasrimarket.com

தீவிரவாத சந்தேகத்தின் பேரில் இளம்பெண் சுவிஸிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளார்.

கொலம்பியாவை சேர்ந்த 23 வயது பெண் சுவிஸில் இருந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை சொந்த நாட்டுக்கே நாடுகடத்தப்பட்டுள்ளதாக சுவிஸ் கூட்டரசு பொலிஸ் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த பெண் மீது குற்றவியல் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

அந்த பெண்ணின் கணவர் தான் சந்தேகம்படும்பாடியான ஒரு குழுவுக்கு தலைவராக இருந்துள்ளார் எனவும் நம்பப்படுகிறது.

கணவனும், மனைவியும் கடந்த நவம்பர் மாதம் பொலிசாரால் கைது செய்யப்பட்ட நிலையில், கணவர் பிரான்ஸில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

இவர்கள் இருவரும் தங்கள் குழுவுடன் சேர்ந்து சுவிஸின் பல்வேறு நகரங்களில் ரயில்களை தடம் புரள செய்வது மற்றும் இரவு விடுதிகள் மற்றும் தேவாலயங்களில் தாக்குதல்கள் நடத்தவும் திட்டமிட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்