சுவிஸில் வீழ்ச்சியடைந்த இறைச்சி விற்பனை

Report Print Raju Raju in சுவிற்சர்லாந்து

சுவிஸில் கடந்த 2016ஆம் ஆண்டை ஒப்பிட்டால் கடந்தாண்டு இறைச்சி விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளது தெரியவந்துள்ளது.

இதுகுறித்த அறிக்கையை விவசாய இணைப்புக்கான கூட்டாட்சி அலுவலகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, உள்நாட்டு மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட இறைச்சி விற்பனை 221,468 டன்களாக குறைந்துள்ளது, இது சதவீத அடிப்படையில் 0.7 ஆகும்.

இறைச்சி விற்பனையின் மொத்த வருவாயும் 0.7 சதவீதம், அதாவது $4.95 பில்லியனாக குறைந்துள்ளது.

சிக்கன், பன்றி இறைச்சி, கன்று இறைச்சி என எல்லாவித இறைச்சியின் விலையும் ஒரு கிலோ 20.95 பிராங்குகள் என்ற சராசரி விலையில் கடந்தாண்டு விற்கப்பட்டன.

இதே விலை தான் கடந்த 2016-ஆம் ஆண்டிலும் இருந்தது.

அதே நேரத்தில் பதப்படுத்தப்படாத இறைச்சிகள் மலிவான விலையிலும், பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் சற்று கூடுதல் விலையிலும் விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்