விமானத்தில் ரகளையில் ஈடுபடும் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு: ஆய்வில் வெளியான தகவல்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிஸ் விமானங்களில் ரகளையில் ஈடுபடும் பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விடவும் இந்த அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

விமானங்களில் ரகளையில் ஈடுபடும் பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 755 என இருந்த நிலையில், இந்த ஆண்டு அது 795 என உயர்ந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

மது, போதை மருந்து, விமான ஊழியர்களுடன் வாக்குவாதம், புகை பிடித்தல் உள்ளிட்ட காரணங்களால் இதுபோன்ற நடவடிக்கைகளில் விமான பயணிகள் ஈடுபடுவதாகவும் தெரியவந்துள்ளது.

சுவிஸ் விமானச் சேவை விமானங்களில் மட்டுமின்றி, Helvetic மற்றும் Edelweiss விமானச் சேவை நிறுவனங்களிலும் விமான பயணிகள் ரகளையில் ஈடுபடுவது அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த டிசம்பர் மாதம் சூரிச் விமான நிலையம் சென்று கொண்டிருந்த விமானம் ஒன்று மது கேட்டு அடம் பிடித்த பயணி ஒருவரால் பாதி வழியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்