வாகன பதிவு எண்ணுக்காக 233,000 பிராங்க் செலவிட்ட நபர்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் வாகன பதிவு எண் ஏலத்தில் இதுவரையான சாதனைகளை முறியடுத்து நபர் ஒருவர் 233,000 பிராங்க் தொகையில் ஏலம் எடுத்துள்ளார்.

சுவிட்சர்லாந்தின் ஸுக் மாகாணத்தில் நடைபெற்ற இந்த ஆண்டின் முதல் வாகன பதிவு எண் ஏலத்தில் இதுவரையான சாதனைகள் முறியடிக்கப்பட்டுள்ளது.

ZG 10 என்ற அந்த சிறப்பு பதிவு எண்ணுக்காக நபர் ஒருவர் சுமார் 233,000 பிராங்க் தொகையை செலவிட்டுள்ளார்.

கடந்த 8-ஆம் திகதி குறித்த எண்ணுக்கு முதன் முறையாக ஏலம் விடப்பட்டபோது 30,000 பிராங்குகள் என அறிவிக்கப்பட்டது.

அதே நாளில் குறித்த எண்ணை கைப்பற்றும் நோக்கில் இருவர் போட்டிபோட்டு ஏலம் கேட்டுள்ளனர்.

அன்றைய தினமே அதுவரையான ஏலத்தில் சாதனை தொகையான 101,000 பிராங்குகள் என பதிவு செய்யப்பட்டது.

தொடர்ந்து புதன் அன்று ஏலம் முடிவுக்கு வரும்போது அதுவரையான அனைத்து சாதனைகளை தகர்த்து 233,000 பிராங்குகள் என அறிவிக்கப்பட்டது.

சுவிட்சர்லாந்தில் இதுவரை வாகன பதிவு எண் ஏலத்தில் சாதனை தொகையாக கருதப்பட்டது "VS 1" பதிவு எண்ணுக்காக கேட்கப்பட்ட 160,000 பிராங்க் தொகையேயாகும்.

இந்த சாதனையை ZG 10 என்ற பதிவு எண் முறியடித்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்