உலகின் சிறந்த நாடாக சுவிஸ் மீண்டும் தெரிவு

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
291Shares
291Shares
ibctamil.com

உலகின் சிறந்த நாடுகளின் பட்டியலில் முதலிடத்தை சுவிட்சர்லாந்து மீண்டும் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

உலகின் சிறந்த நாடுகள் தொடர்பில் 80 நாடுகளில் ஆய்வு மேற்கொண்ட அமெரிக்க செய்தி நிறுவனம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

மொத்தமுள்ள 65 அளவீடுகளில் பெரும்பாலானவற்றில் சுவிஸ் முதன்மையாக உள்ளது என குறித்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

குடியுரிமை மற்றும் தொழில்துறையில் இரண்டாம் இடத்திலும் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதில் 5-ஆம் இடத்திலும் வாழ்க்கை தரத்தில் 6-ஆம் இடத்திலும் கலாச்சார ஈடுபாட்டில் 7-வது இடத்திலும் பாரம்பரியத்தை கடைபிடிப்பதில் 27ஆம் இடத்திலும் உள்ளதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

குடியுரிமை வழங்கும் நடவடிக்கையில் சுவிஸ் அரசு பரந்துபட்ட கண்ணோட்டத்தில் செயல்படுவதாகவும், இதனால் 10க்கு 8.1 என்ற புள்ளியைப்பெற்றுள்ளது.

தொழில்துறையை பொறுத்தமட்டில் 2-வது இடம் என்றாலும் அரசு மீதான நம்பகத்தன்மையில் உலக நாடுகளுக்கு அதிருப்தி உள்ளதாகவும் அந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வாழ்க்கைத்தரத்தில் உலகில் 6-வது இடத்தில் இருந்தாலும், சுவிட்சர்லாந்தில் பொருளாதார ஸ்திரத்தன்மை எஞ்சிய நாடுகளைவிட மிக உச்சத்தில் இருப்பதாகவும், அரசியல் ஸ்திரத்தன்மை அதேபோன்று 10க்கு 9.5 என பதிவாகியுள்ளதாகவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

இருப்பினும் சுவிட்சர்லாந்தில் வலிமையான ராணுவ கட்டமைப்பு, தலைமைப்பண்பு, அரசியல் ஈடுபாடு உள்ளிட்டவைகளும் தரவரிசையில் மிகவும் குறைவான புள்ளிகளையே பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்