சுவிட்சர்லாந்தில் அதிகரிக்கும் தொலைதூர பயணம்

Report Print Athavan in சுவிற்சர்லாந்து
312Shares
312Shares
ibctamil.com

2016 ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தில் வேலைக்கு செல்வோரின் சராசரி பயண நேரம் 30 நிமிடங்கள் அல்லது 14.8 கிலோமீட்டர் (9.2 மைல்கள்) அதிகரித்துள்ளது என பெடரல் அலுவலகத்தின் புள்ளிவிவரம் தெரிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்தின் தொழிலாளர் பிரிவில் உள்ள மொத்த மக்கள் தொகையான 4.8 மில்லியன் மக்களில் ஒவ்வொரு நாளும் பணிக்கு செல்வோரின் எண்ணிக்கை 3.9 மில்லியன் மக்களாக 2016-ம் ஆண்டு இருந்தது.

ஆனால் இதே அளவுகோளானது 1990-ம் ஆண்டு 2.9 மில்லியன் ஆக இருந்துள்ளது. அவர்களில் 71 சதவிகிதம் பேர் வெவ்வேறு நகராட்சிகளில் பணியாற்றினர், 20 சதவிகிதம் பேர் வேறு ஒரு மண்டலத்துக்குச் சென்று பணியாற்றினர், இதை 1990 -ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 12% மக்கள் பணிக்கு செல்வது அதிகரித்துள்ளது என ​புள்ளியியல் நிறுவனம் புதனன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

தொலைதூர பணிக்கு செல்லும் மக்களில் பெரும்பான்மையாக 52% மக்கள் தாங்களாகவே வாகனங்களை ஓட்டியபடி பணிக்கு சென்றனர், அதே சமயத்தில் பொது போக்குவரத்தான ரயிலில் 17% மக்களும் , கிட்டத்தட்ட 15% பேர் சைக்கிள் ஓட்டியவாரோ அல்லது நடந்தோ பணிக்குச் சென்றார்கள்.

மிக அதிகமான பயணிகள் என Zurich மண்டலத்தில் 88,000 பேர் இருந்தனர். Basel நகரில் இருந்து 51% பயணிகள் நாட்டின் மற்ற இடங்களுக்கு ஒவ்வொரு நாளும் பயணித்தனர். Zug மண்டலத்தில் 34%, Zurich 13% மற்றும் ஜெனீவா 11% என பயணம் செய்வோரின் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

8,00,000 இளைஞர்கள் மாணவர்களையும் சேர்த்து 2016 ஆம் ஆண்டில் படிப்பு அல்லது பயிற்சிக்கு என வெவ்வேறு இடங்களுக்கு தினசரி பயணிக்கிறார்கள் என்று புள்ளிவிவர நிறுவனம் கண்டறிந்துள்ளது.

புள்ளிவிவரம்படி சராசரியாக ஒரு நாளுக்கு சுமார் 22 கி.மீ தூரம் அவர்கள் பயணிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்