சுவிஸில் விபத்துக்குள்ளான விமானம்: 4 பேர் பலி

Report Print Kabilan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், 2 விமானிகள் உட்பட நான்கு பேர் பலியாகியுள்ளனர்.

சுவிஸின் Basel நகரில் உள்ள விவசாய நிலத்தில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி வீழ்ந்து கிடந்துள்ளது.

கடந்த செவ்வாய்கிழமை நடந்த இந்த விபத்தில், 4 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில், சுவிஸைச் சேர்ந்த 61 வயதான விமானியும், 48 வயதான அவருடைய உதவியாளரான விமானியும் அடங்குவர்.

இவர்கள் இருவரும் மிகவும் அனுபவசாலிகளான விமானிகள் ஆவார். ஆனால், விபத்து எவ்வாறு நடந்தது என்பது இதுவரை தெரியவில்லை.

மேலும், விபத்து நடந்த இடத்தில் கருப்பு பெட்டி கிடைக்கவில்லை. விமானத்தின் பாகங்கள் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

விசாரணைகள் தொடர்ந்து நடைபெறுவதாகவும், விபத்துக்கான காரணம் விரைவில் தெரிய வரும் என்றும் பொலிசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, 200க்கும் அதிகமான மீட்புப் பணி அதிகாரிகள், விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்