காணாமல் போன இளம்பெண்ணின் உடல் கண்டுபிடிப்பு: கொலையா? பொலிஸ் விசாரணை

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

கடந்த நவம்பர் மாதம் 22ஆம் திகதி காணாமல் போனதாக பொலிசாரால் அறிவிக்கப்பட்ட ஜெனிவாவைச் சேர்ந்த இளம்பெண் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

அவரது உடல் Neuchâtel ஏரியினருகே பல வாரங்களுக்குப் பின் கண்டெடுக்கப்பட்டது.

அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 21 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றத்திற்கான காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும், அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

அரசு வழக்கறிஞர் விசாரணையைத் தொடங்கியுள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...