அந்தரங்க புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளும் சுவிஸ் மாணவர்கள்: அதிர்ச்சி தகவல்

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து
187Shares

சுவிட்சர்லாந்தின் Basel நகரில் உள்ள மாணவர்கள் பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் விளையாடுவதைவிட டிஜிட்டல் விளையாட்டு மைதானங்களில் நன்றாக விளையாடுகிறார்கள்.

தங்கள் அந்தரங்கப் புகைப்படங்களை மற்றவர்களுக்கு அனுப்புவதில் அவர்கள் கூச்சப்படுவதில்லை.

Basel பள்ளி மாணவர்களில் 15 சதவிகிதத்தினர் அவர்களது அந்தரங்கப் புகைப்படங்களை ஏற்கனவே அனுப்பியுள்ளனர்.

இதனால் எவ்வளவு பிரச்சினைகள் அவர்களுக்கு ஏற்படும் என்பதை அவர்கள் எண்ணுவதில்லை.

அவர்கள் புகைப்படங்கள் "Child Pornography" என்னும் பிரச்சினைக்கு உட்பட்டு அதனால் அவர்கள் தண்டனைக்குள்ளாகலாம்.

இன்று நண்பர்களாக இருப்பவர்கள் தங்களுக்குள் அந்தரங்கப் புகைப்படங்களை பகிர்ந்து கொண்டு, பின்னர் அவர்கள் எதிரிகளாகிவிட்டால், காதலின் அடையாளமாக அனுப்பப்பட்ட ஒரு புகைப்படம் பின்னர் பழிவாங்குவதற்காக பயன்படுத்தப்படும் ஆயுதமாக மாறிவிடலாம்.

புகைப்படத்தை உருவாக்கும்போது இருந்த அதே நட்புச் சூழல் எப்போதும் தொடர்வதில்லை.

பள்ளிகளில் இத்தகைய தவறுகளைத் தவிர்ப்பதற்காக பல திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. உதாரணமாக "Herzsprung" என்னும் திட்டம் உறவுகளுக்குள் மரியாதையையும், அந்தரங்கப் புகைப்படங்களை அனுப்புவதால் ஏற்படும் தீங்கையும் குறித்து விளக்குகிறது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்