சுவிஸில் நடைபெறும் பொருளாதார மாநாட்டில் பங்கேற்கும் மோடி

Report Print Kabilan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் நாளை மறுதினம், சர்வதேச பொருளாதார மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்ற உள்ளார்.

சுவிஸின் டாவோஸ் நகரில், இம்மாநாடு 5 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் 70 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். மற்றும் 38 பன்னாட்டு நிறுவனங்களின் தலைவர்கள், உலக வர்த்தக அமைப்பு, உலக வங்கி, சர்வதேச செலாவணி நிதியம் ஆகியவற்றின் தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.

நாளை மறுதினம் நடைபெற உள்ள இம்மாநாட்டின் துவக்க நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.

அதன் பின்னர், சுவிஸின் ஜனாதிபதி அலைன் பெர்செட் உள்ளிட்ட தலைவர்களை, மோடி சந்தித்து பேச இருக்கிறார்.

சர்வதேச அளவில் முக்கிய தலைவர்கள் பலர் பங்கேற்பதால், இம்மாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இது குறித்து பிரதமர் மோடி கூறுகையில், ‘நமது நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. இது சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

நமக்கான நல்ல வாய்ப்பாக இம்மாநாடு அமையும். 125 கோடி மக்களின் குரலை, இம்மாநாட்டில் வெளிப்படுத்துவதே எனது நோக்கம்’ என தெரிவித்துள்ளார்.

சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு, டாவோஸ் செல்லும் இந்திய பிரதமர் என்னும் பெருமையை நரேந்திர மோடி பெறுகிறார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...