சுவிட்சர்லாந்தில் விளையாட்டின் போது இளைஞருக்கு பலத்த அடி

Report Print Harishan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் உட்புற சுவர் ஏறும் விளையாட்டில் நபர் ஒருவருக்கு கை மற்றும் தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் St Gallen மாகாணத்தில் உள்ள உட்புற சுவர் ஏறுதல் விளையாட்டு அரங்கில் கடந்த வியாழன்(18/1/2018) அன்று போட்டிகள் நடைபெற்றுள்ளது.

அதில் சுவர்கள் மீது தாவும் விளையாட்டு மிகவும் ஆபத்தானது என்பதால் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் விளையாட வேண்டும் என முன்னரே நிர்வாகம் சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால் எந்த வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் இல்லாமல் சுவர் ஏற முயன்ற நபர் ஒருவர் 10 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததில், அவரின் தலை மற்றும் தோள்பட்டை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து போலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அந்த நபரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

மேலும் இதுகுறித்து மைதான நிர்வாகம் கூறுகையில், விளையாட வருபவர்களின் பாதுகாப்பை அவர்கள் தான் உறுதி செய்து கொள்ள வேண்டும், நிர்வாகம் பொறுப்பல்ல என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்