சுவிட்சர்லாந்தில் வடகொரியா ஜனாதிபதி: நினைவுகளை பகிரும் நண்பர்கள்

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

வட கொரிய ஜனாதிபதி Kim Jong-unஇன் படத்தைக் கண்டாலே முகத்தைத் திருப்பிக்கொள்பவர்கள் பலர் இருக்கும்போது அவரை சந்திக்க சிலர் ஆவலாக உள்ளனர்.

சுவிற்சர்லாந்தின் Liebefeld-Steinhölzli public school என்னும் பள்ளியில் படித்த வடகொரிய ஜனாதிபதி Kim Jong-un உடன் படித்த நண்பர்கள்தான் அவரை சந்திக்க விரும்புபவர்கள்.

இன்று சர்வாதிகாரியாகப் பார்க்கப்படும் அவரை அவரது நண்பர்கள் கூடைப்பந்து விளையாடும், நகைச்சுவை உணர்வு கோண்ட ஒரு நல்ல நண்பராக நினைவு கூறுகிறார்கள்.

கிம்முடன் படித்த Bern chef ஆகிய Joao Micaelo, கிம் ஒரு நல்ல நண்பர், அவரைப் பலருக்கு மிகவும் பிடிக்கும், இப்போது அவர் எப்படி இருக்கிறார் என்பது எனக்குத் தெரியாது, ஆனால் அவரை எனது பள்ளித்தோழனாகத்தான் நான் பார்க்கிறேன்.

நாங்கள் இருவரும் சேர்ந்து பலமுறை கூடைப்பந்து விளையாடியிருக்கிறோம் என்று கூறும் Joao Micaelo, ”கிம் உங்களுக்கு நேரமிருந்தால், என்னைத் தொடர்பு கொள்ளுங்கள், நாம் கூடைப்பந்து விளையாடலாம்” என்று அவருக்கு கூற விரும்புவதாகத் தெரிவிக்கிறார்.

Marco Imhof என்னும் இன்னொரு பள்ளித் தோழர், வேடிக்கையானவர் அவர், எப்போதும் ஜெயிக்க வேண்டும் என்னும் எண்ணம் கொண்ட அவருக்கு தோற்கப் பிடிக்காது என்று தெரிவிக்கிறார்.

கிம் சுவிற்சர்லாந்திலிருக்கும்போது அவரது அத்தையான Ko Yong Suk, தானும் தனது கணவரும் கிம்மின் பாதுகாவலர்களாக நியமிக்கப்பட்டதாகக் கூறுகிறார்.

அவரை ஒரு சாதாரணக் குழந்தையாகத்தான் வளர்த்ததாக அவர்கள் கூறுகிறார்கள். விடுமுறை நாட்களில் கிம்மை அவர்கள் பல முறை ஆல்ப்ஸ் மலை உட்பட பல இடங்களுக்கு சுற்றுலா அழைத்துச் சென்றதை அவர்கள் நினைவு கூறுகிறார்கள்.

அதனால்தானோ என்னவோ கிம்முக்கு இப்போதும் சுவிற்சர்லாந்து மிகவும் பிடிக்கும். முக்கியமான அரசு அதிகாரிகள் பலருக்கு அவர் இப்போதும் சுவிஸ் வாட்சுகளைப் பரிசளிப்பதை பலரும் அறிந்திருக்கிறார்கள்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்