பிரித்தானியாவின் முக்கிய வியாபார சந்தையாக விளங்கும் சுவிஸ்: ஆய்வில் தகவல்

Report Print Harishan in சுவிற்சர்லாந்து

பிரித்தானியாவின் முக்கிய வியாபார சந்தையாக சுவிஸ் விளங்குவதாக பேராசிரியர் ஒருவர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

2014ஆம் ஆண்டு சுவிற்சர்லாந்து பிரித்தானியாவின் மிக முக்கியமான ஏற்றுமதிச் சந்தைகளில் ஆறாவது இடத்தைப் பிடித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 சதவிகிதம் பிரித்தானியப் பொருட்கள் மற்றும் சேவைகள் சுவிஸ் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தன. பிரெக்சிட்டுக்குப் பிறகு சுவிஸ் மற்றும் ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பில் இல்லாத பிற ஐரோப்பிய நாடுகளுடனான அணுகல் எவ்வாறு பராமரிக்கப்படும் என்பதைக் குறித்து பிரித்தானியா மவுனம் சாதித்தது.

புதிய மற்றும் வளர்ந்துவரும் சந்தைகளுடன் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரெக்சிட் வாய்ப்புகளை வழங்கலாம். குழப்பங்களைக் குறைப்பதற்காக அருகிலுள்ள ஐக்கிய யூனியனில் உள்ள மற்றும் இல்லாத முக்கியமான சந்தைகளுடனும் அது நல்லுறவைப் பராமரிக்கவும் வேண்டும்.

குறிப்பாக பிரித்தானியாவின் ஏற்றுமதி சந்தையில் மற்ற ஐரோப்பிய நாடுகளை விட சுவிஸ் முக்கிய பங்கு வகித்து வருவதாகவும், பிரித்தானியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் பெரும்பாலும் சுவிஸில் வியாபாரம் செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

புதிதாக தொடங்கப்படும் சிறு மற்றும் புதிய நிறுவனங்களுடனும் வர்த்தக உறவு வைத்துக் கொள்வதற்கான வாய்ப்புகளை BREXIT வழங்கி வருவதாக பேராசிரியர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்