ஞானலிங்கேச்சுரத்தில் புத்தாண்டும் ஆதிரை வழிபாடும்

Report Print Dias Dias in சுவிற்சர்லாந்து
102Shares
102Shares
ibctamil.com

பொதுப்புத்தாண்டு 2018 இம்முறை சைவத்தமிழ் மக்களுக்கு பல்சிறப்புக்களுடன் தோன்றியுள்ளது.

ஆடல்வல்லானை திருவண்ணாமலையில் இருந்து பாடிப்பணிந்து, தன் தலையில் தீட்கை அளித்த சிவத்தை நோக்கி திருப்பயணமாக நடந்து, தில்லையில் சிவத்துடன் கலந்த பெருமான் மாணிக்கவாசகர் அளித்த திருவெம்பாவை இம்முறை புத்தாண்டுடன் இணைந்திருந்தது.

அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரத்தில் 01. 01. 2018 திங்கட்கிழமை திருவெம்பாவை, முழுமதி வழிபாட்டுடன் வழிபாடுகளுடன் புத்தாண்டும் இனிய நினைவாக தடம் பதித்துள்ளது.

பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் நிறைந்து, தாயகத்தின் நெருக்கத்தை புலம்பெயர் நாட்டிலும் கண்டனர், மகிழ்வுடன் இனிமை அளித்த பொன்னான பொழுதாகப் பொன்னம்பலவன் முன் நிறைத்தனர்.

சொல்லப்படும் வசனங்கள் மந்திரங்கள் உணர்ந்து சொல்லி, அவற்றின் பொருள் என்ன சொல்பவர் தான கேள்வி எழுப்பி அறிவை மேலும் பெருக்கி, செய்யப்படும் சடங்குகள் யாவை அதன் உள்ளுறை என்ன? எனக் கேள்வியும் கேட்கச் செய்து, ஏன் செய்யப்படுகின்றன? ஞானவழியில் தேவைத்து, இறைவனை எழுந்தருளச் செய்து கருவறையில் செந்தமிழித் திருமறை வழிபாடு சிறப்பாக அமைந்தது.

மறுநாள் 02. 1. 2018 செவ்வாய்க்கிழமை காலை 04.00 மணிமுதல் ஆதிரைப் பெருநாள் திருவாதிரை வழிபாடு மிகு சிறப்புடன் நடைபெற்றது. 108 குடங்களில் நீர்சுமந்தேத்தி, 1008 சிவமந்திரத்தால் தெய்வத்தமிழில் ஓதி, தமிழ் மொழியில் அருளாளர்கள் பாடிய பாடல்களால் பல அற்புதங்களால் நடததை நினைவு படுத்துதாக அமைய, பெருவழிபாடு நடைபெற்றது.

திருமறைக்காட்டில் கதவை திறக்கப் பாடினார் அப்பர். மூடப்பாடினார் சம்பந்தர், மாணிக்க வாசகர் அருளிய பால்களை தேன் என சிவபெருமான் வழிமொழிந்தார், இன்று ஞானலிங்கேச்சுரத்தில் அனைவர் உள்ளத்தையும் திறக்க திருவாதிரை நிகழ்வு சிறப்புற நடந்தது. யாவரும் தம் கைகளால் இறைவனுக்கு நேரடியாக வழிபாட்டினை ஆற்றினர்.

ஆடல்வல்லான் சுவிற்சர்லாந்தின் பேர்ன்நகர் ஐரோப்பாத்திடலில் தில்லை அம்பலத்தில் எழுந்தவடிவில் ஆடிவர, தமிழுக்கு கழகம் கண்ட ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கப் பெருமானிற்று 'கொன்றைச் சடையார்க்கு ஒன்றைத் தெரிய கொஞ்சித் தமிழால் பகர்வோனே' என அருணகிரியார் பாடிய திருப்பொருளாகத் தமிழ் எங்கும் ஒலிக்க 108 அருளமுது படைத்தளித்து நிறைவில் அடியார்களுக்கு அருளுணவு அளித்து வழிபாடுகள் நண்பகல் 12.00 மணிக்கு நிறைவுற்றன.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்