சுவிட்சர்லாந்தில் இந்தியாவின் நட்சத்திர ஜோடி: புதுவருட கொண்டாட்டமா?

Report Print Harishan in சுவிற்சர்லாந்து
893Shares

இந்தியாவின் பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் சுவிட்சர்லாந்திற்கு சுற்றுலா சென்றுள்ளார்.

பாலிவுட்டின் நட்சத்திர தம்பதியாக அறியப்படுபவர்கள் சயிப் அலிகான்- கரீனா கபூர்.

காதல் ஜோடியின் அழகிய மகனான தைமுர் அலிகானின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் குடும்பத்தினர் சூழ டிசம்பர் 20ஆம் திகதி கொண்டாடப்பட்டது.

அதன்பின் சுற்றுலா செல்வதற்கு திட்டமிட்ட அந்த தம்பதியினர் தங்களின் குழந்தையுடன் மும்பை விமான நிலையம் வழியாக ஐரோப்பா சென்றுள்ளார்.

தனது வழக்கமான விடுமறை ஸ்பாட்டான சுவிட்சர்லாந்திற்கு சென்றுள்ள அவர்கள் கடும் பனியில் எடுத்த புகைப்படம், கரீனா கபூரின் அதிகாரப்பூர்வ ரசிகர்களுக்கான ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இவர்கள் புது வருட கொண்டாட்டத்திற்காக சுவிஸ் சென்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், குழந்தை பிறந்த பின் கரீனா கபூர் நடித்துள்ள முதல் திரைப்படமான Veere-Di-Wedding மற்றும் சயிப் அலி கான் நடித்துள்ள Kaalakaandi உள்ளிட்ட திரைப்படங்கள் விரைவில் வெளிவரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

#taimursfirstbirthday💙💙💙#birthdayfun🎉 📸 @thehouseofpixels

A post shared by KK (@therealkarismakapoor) on

💙💚💛🧡❤️💜#birthdayfun#ourloves#pataudidiaries 📸 @thehouseofpixels

A post shared by KK (@therealkarismakapoor) on

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்