சுவிஸில் தகுதி வாய்ந்த அகதிகள் வேலையில்லாமல் திண்டாடும் அவலம்

Report Print Raju Raju in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் தகுதி வாய்ந்த அகதிகள் பலர் சரியான வேலை வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருவது தெரியவந்துள்ளது.

நாட்டுக்குள் வந்து சில ஆண்டுகள் ஆகியும் தகுதி வாய்ந்த அகதிகள் பலர் அரசின் சமுதாய நலன் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவியால் தான் வாழ்ந்து வருகிறார்கள்.

சூரிச்சில் உள்ள ஒரு PR நிறுவனம், தகுதி வாய்ந்த அகதிகளின் கவனத்தை ஈர்க்க விரும்புகிறது.

தனது சொந்த ஊழியர்களில் ஒரு உறுப்பினராக அகதி ஒருவரை தெரிவு செய்துள்ளது.

இது போல அனைவரும் செய்தால் அகதிகளுக்கு வேலை கிடைக்கும். இது குறித்து நாட்டின் நீதிதுறை அமைச்சர் சின்மோனிடா சொமாருகா கூறுகையில், வேலை சந்தையில் அகதிகளை ஒருங்கிணைப்பது குறித்த திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

அகதிகளின் தொழில்சார் திறனை சிறந்த முறையில் எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த ஒருங்கிணைந்த திட்டங்கள் குறித்தும் வரையறுக்கப்பட்டுள்ளன என கூறியுள்ளார்.

இதனிடையில் கடந்த 2014-ல் ஐக்கிய நாடுகள் சபை நடத்திய ஆய்வில் சுவிஸுக்கு வந்து முதல் ஐந்து ஆண்டுகள் ஆன அகதிகளில் ஐந்தில் ஒருவருக்கு மட்டுமே நாட்டில் வேலை கிடைத்தது என கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்