ஜேர்மனியில் விபத்துக்குள்ளான சுவிஸ் உணவக கப்பல்: 27 பயணிகள் படுகாயம்

Report Print Harishan in சுவிற்சர்லாந்து

ஜேர்மனியின் பாலத்தில் மோதி விபத்துக்குள்ளான சுவிஸ் மிதக்கும் உணவக கப்பலில் பயணித்த 27 நபர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

சுவிஸ் நாட்டின் மிதக்கும் உணவக கப்பலான ‘Swiss Crystal’ என்னும் கப்பல், 5 நாள் பயணமாக ரைன் ஆற்றின் வழியே நெதர்லாந்து வரை சென்று வருவதற்கு திட்டமிட்டுள்ளது.

இதற்காக 129 பயணிகளுடன் புறப்பட்ட அந்த கப்பல் ஜேர்மனியின் Duisburg மாகாணத்துக்கு அருகே சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக நெடுஞ்சாலை பாலம் ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

விபத்து ஏற்பட்ட சிறிது நேரத்தில் அப்பகுதியில் குவிந்த மீட்பு படையினர் கடும் போராட்டத்துக்கு பின் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

101 மீ நீளமான கப்பல் என்பதால் அதன் கூர்மையான முனைகள் கடுமையாக சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தில் படுகாயமடைந்த 4 பயணிகளுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வரும் நிலையில் 27 பயணிகள் சிறு காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் சம்பவ இடத்திலேயே விபத்தில் சிக்கியவர்களுக்கு உரிய முறையில் அவசரகால சிகிச்சை வழங்கப்பட்டதால் உயிர் சேதங்களை தடுக்க முடிந்ததாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்