கடவுள் பேசுவது கேட்பதாக கூறி அதிர வைத்த பெண்: பின்னர் நேர்ந்த சோகம்

Report Print Raju Raju in சுவிற்சர்லாந்து

கடவுள் பேசுவது தனக்கு கேட்பதாக பெண்ணொருவர் கூறிய நிலையில் அவருக்கு மூளைக் கட்டி (brain tumour) நோய் இருப்பது தெரியவந்துள்ளது.

சுவிட்சர்லாந்தை சேர்ந்த பெயர் வெளிவராத பெண்ணொருவர் கடவுள் பேசுவது தனக்கு கேட்பதாக கூறி தன்னை தானே காயம் ஏற்படுத்தி கொண்டுள்ளார்.

இது குறித்து அறிந்த பெர்ன் நரம்பியல் மருத்துவர்கள் அந்த பெண்ணுக்கு ஸ்கேன் எடுத்து பார்த்ததில் அவருக்கு மூளைக் கட்டி பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

முதலில் நோய் பாதிப்பால் பெண்ணுக்கு மன நோய் ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் நினைத்த நிலையில் சில முக்கிய விடயங்களை கண்டுப்பிடித்துள்ளனர்.

இது குறித்து உளவியல் நரம்பியல் பேராசிரியர் செபஸ்டின் வால்தர் கூறுகையில், பேசும் குரல் வெளிவருவதற்கு முக்கிய உதவியாக இருக்கும் பகுதியில் பெண்ணுக்கு கட்டி உள்ளது.

அது தான் கடவுள் தன்னிடம் பேசுவது போன்ற மத உணர்ச்சியை அவருக்கு கொடுத்துள்ளது.

கட்டி பெரிதாகும் பட்சத்தில் பெண்ணுக்கு இது மனச்சிதைவு நோயாக மாறும் அபாயம் உள்ளது.

மனநல நோயாளிகளுக்கு கடவுள் போன்ற குரல்கள் கேட்பது பொதுவானவை என்றாலும் இவர் விடயத்தில் இது புதிது என கூறியுள்ளார்.

மூளைக் கட்டியால் பாதிக்கப்பட்டுள்ள பெண்ணின் தற்போதைய நிலை குறித்து தகவல் வெளியாகவில்லை.


மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்