சுவிஸின் பனிச்சறுக்குகளில் இனி ஜாலியாக செல்பி எடுக்கலாம்

Report Print Harishan in சுவிற்சர்லாந்து

சுவிஸின் பனிச்சறுக்குகளில் பயணிப்போர் செல்பி எடுத்துக்கொள்ளும் விதமாக புதிய கூண்டு அமைக்கப்பட்டுள்ளது.

பொதுவாக சுவிஸின் பனிமலைகளில் உள்ள பனிச்சறுக்குகளுக்கு இளம் வயதினர்கள் விளையாட செல்வது வழக்கம்.

அவ்வாறு விளையாட செல்லும் இளைஞர்கள் செல்பி எடுத்துக்கொள்ள அதிக ஆர்வம் செலுத்தினாலும், பனிச்சறுக்குகள் செங்குத்தானதாக இருப்பதால் பாதுகாப்பு கருதி செல்பி எடுக்காமல் திரும்பி வர வேண்டிய சூழல் இருந்து வந்தது.

அதையும் தாண்டி செல்பி எடுக்க முயன்று, குறிப்பாக மார்ச்-2014 முதல் செப்டம்பர்-2016 வரையிலான காலக்கட்டங்களில் மட்டும் 127 நபர்கள் பலியாகியுள்ளனர்.

இதனைத் தடுக்கும் வகையிலும் சுற்றுலா பயணிகளை ஊக்குவிக்கும் வகையிலும் சுவிஸின் காண்டன் Graubünden மாகாணத்தில் உள்ள Piz Lagalp பனிமலைப் பகுதியில் புதிய கூண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

2 மீ சுற்றளவில் கடல் மட்டத்தில் இருந்து 2,959 மீ உயரத்தில் Upper Engadine பகுதியில் அந்த இரும்பு கூண்டு அமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பனிச்சறுக்கில் ஈடுபடுபவர்கள் பத்திரமாக செல்பி எடுத்துக்கொள்ளலாம் என Corvatsch AG இயக்குநர் Markus Moser தெரிவித்துள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்