சுவிஸில் மக்கள் தொகையை விட இதன் வளர்ச்சி தான் அதிகமாம்

Report Print Raju Raju in சுவிற்சர்லாந்து

சுவிஸில் மக்கள் தொகையை விட உணவு இறக்குமதி வேகமாக வளர்ச்சியடைவது தெரியவந்துள்ளது.

அரசின் சுங்க நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்ட ஆய்வின் படி, கடந்த 1990-லிருந்து 2016 வரை உணவு பொருட்களின் இறக்குமதி 80 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாகவும், இது நாட்டின் மக்கள் தொகை வளர்ச்சியை விட மூன்று மடங்கு வேகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, இந்த காலகட்டத்தில் ஒரு நபர் உட்கொண்ட இறக்குமதி செய்யப்பட்ட உணவின் அளவு 344 கிலோ கிராமிலிருந்து 490-வாக அதிகரித்துள்ளது.

முக்கியமாக, பானங்களின் இறக்குமதி 40 சதவீதம் என்ற அளவில் மிகவும் உயர்ந்துள்ளது, அதில் கனிம நீரின் சதவீதம் மட்டும் 22 ஆகும்.

அதே போல கோதுமையை அடிப்படையாக கொண்ட உணவு பொருட்களின் இறக்குமதியும் கணிசமாக உயர்ந்துள்ளது.

வேளாண் பொருட்கள், பழங்கள் மற்றும் காய்கறி இறக்குமதிகள் முறையே 8 மற்றும் 9 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாகவும் சுங்க நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சுவிஸின் மொத்த இறக்குமதியில் $10.07 பில்லியன் மதிப்புகள் கொண்ட உணவு மற்றும் பானம் சம்மந்தமான பொருட்களின் சதவீதம் மட்டும் 6 என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்