பயணிகள் கப்பலில் உட்புகுந்த ஏரி நீர்.. காப்பாற்றிய பொலிஸ்

Report Print Kabilan in சுவிற்சர்லாந்து
159Shares

சுவிஸில் பயணிகள் சென்ற கப்பலில் நீர் புகுந்ததில், விரைந்து வந்த மீட்புக் குழுவினர் பயணிகளை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

சுவிஸின், Lucerne ஏரியில் The MS Diamant என்னும் கப்பல், 163 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. Kehrsiten-Burgenstock துறைமுகத்தை கப்பல் நெருங்கியபோது, கப்பலில் உட்புறத்தில் இருந்த துளையின் வழியாக ஏரி நீர் உட்புகுந்தது.

இதனைத் தொடர்ந்து, உடனடியாக பொலிஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், பொலிஸ் மற்றும் மீட்புக்குழுவினர் விரைந்து வந்து பயணிகளை கப்பலில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றினர்..

அதன் பின்னர், தீயணைப்பு வீரர்கள் கப்பலில் நீர் கசியும் இடத்தினைக் கண்டுபிடித்து, நீரை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், கப்பலில் உள்ள பழுதுகள் சரி செய்யப்படும் வரை, கப்பல் இயக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்