சுவிஸ் பெருவிழாவிற்கு யுனெஸ்கோ அங்கீகாரம்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
139Shares

சுவிட்சர்லாந்தில் ஆண்டு தோறும் நடைபெறும் Fasnacht பெருவிழாவினை கலாசார பாரம்பரிய நிகழ்வு என யுனெஸ்கோ அங்கீகாரம் அளித்துள்ளது.

சுவிட்சர்லாந்தின் பாஸல் மாகாணத்தில் ஆண்டு தோறும் நடைபெறும் மாபெரும் Fasnacht விழாவுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் யுனெஸ்கோ அங்கீகாரம் அளித்துள்ளது.

தென் கொரியாவின் ஜெஜு தீவில் நடைபெற்ற 12-வது கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளில் கடைபிடிக்கப்பட்டுவரும் கலாசார கொண்டாட்டங்கள் மீது விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டே யுனெஸ்கோ ஆண்டு தோறும் இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.

யுனெஸ்கோ அறிவித்துள்ள இந்த அங்கீகாரம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள சுவிஸ் அரசாங்கம், பாஸல் Fasnacht விழா தொடர்பான மனுவை பரிசீலனை செய்ததே முன்மாதிரியானது என தெரிவித்துள்ளது. பாஸல் Fasnacht பெருவிழாவானது ஆண்டு தோறும் 200,000 பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது.

கிறிஸ்தவர்களின் சாம்பல் புதன் நிகழ்வினையடுத்து வரும் திங்கள் அன்று அதிகாலை 4 மணிக்கு துவங்கி தொடர்ந்து நான்கு நாட்கள் நடைபெறும்.

கடந்த 10 ஆண்டுகளாக மிகவும் திட்டமிடப்படு வெற்றிப்பூர்வமாக நடைபெற்றுவரும் இந்த விழாவுக்கு பலதரப்பினரிடம் இருந்தும் பேராதரவு வழங்கப்படுவது நிர்வாகிகளின் தனித்திறமை எனவும் யுனெஸ்கோ பாராட்டியுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்