ஜெனிவா நீச்சல் குளங்களில் மேலாடை இல்லாமல் குளிக்க தடை

Report Print Kabilan in சுவிற்சர்லாந்து
208Shares

சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் நீச்சல் குளங்களில் புர்கினி மற்றும் மேலாடை இல்லாமல் நீந்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சுவிஸின் ஜெனீவாவில், நகரில் உள்ள நீச்சல்கள் குளங்களில் பயன்படுத்தப்படும் உடைகள் குறித்து நீண்டநாட்களாக விவாதம் நடந்து வந்தது.

பொது நீச்சல் குளங்களில் இளைஞர்கள், சாதாரண உடைகளை அணிந்து நீந்திய போது, சுகாதாரம் குறித்த கேள்வி எழுந்தது.

அதன் விளைவாக புதிய விதிமுறையை, நகரில் உள்ள நீச்சல் குளங்களில் நீந்துவதற்கு கொண்டுவர வேண்டும் என்ற குரல் எழுந்தது.

இதனைத் தொடர்ந்து, தற்போது கொண்டு வரப்பட்டுள்ள புதிய விதிமுறையின்படி, நீந்துபவர்கள் கண்டிப்பாக முழங்கால்களுக்கு குறைவான ஆடைகளை அணியக் கூடாது. மற்றும் அது நீச்சலுக்கு சம்பந்தமான உடையாக இருக்க வேண்டியது அவசியம்.

மேலும் புர்கினி மற்றும் மேலாடையின்றி நீந்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த புதிய விதிமுறைக்கான வாக்கெடுப்பில் அதிக அளவு வாக்குகள் பதிவானதால் இது அமலுக்கு வந்துள்ளது. எனினும், இதற்கு சிலர் கண்டனங்களும் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்