சுவிசில் சர்ச்சைக்குரிய டேட்டிங் தளத்துக்கு விளம்பரம்! மாணவர்களுக்கு அழைப்பு

Report Print Fathima Fathima in சுவிற்சர்லாந்து

பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் நாட்டில் தடை விதிக்கப்பட்ட டேட்டிங் தளம் சுவிட்சர்லாந்தில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சூரிச்சின் Technopark-க்கு வெளியே விளம்பர பதாகையுடன் கூடிய வான் நின்றுள்ளது, அதில் மாணவர்களை கவரும் வண்ணம் வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.

வசதியான வாழ்க்கையை வாழ வேண்டுமா? Sugar Daddy அல்லது Sugar Mama-வுடன் டேட்டிங் செல்லுங்கள் என குறிப்பிடப்பட்டிருந்தது.

Sugar Daddy அல்லது Sugar Mama என்பது வசதி படைத்த வயதில் மூத்தவர்கள் இளவயது மாணவர்களுடன் உறவு கொள்வதாகும், இதற்கு பதிலாக மாணவர்களுக்கு தேவையான பண உதவியை அளிப்பார்கள்.

இதற்கு முன்பாக ஏற்கனவே பிரான்ஸ் மற்றும் பெல்ஜியத்தில் இதே போன்று விளம்பரப்படுத்தப்பட்ட நிலையில், உடனடியாக பொலிசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில் இந்த தளத்தின் உரிமையாளரான Sigurd Vedal, இது வழக்கமான டேட்டிங் தளத்தை போன்றது தான் என்றும், பண உதவி அவர்களது விருப்பத்தை பொறுத்தது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்