பிரித்தானியா மகாராணியின் உறவினர் சுவிசில் காலமானார்

Report Print Gokulan Gokulan in சுவிற்சர்லாந்து

96 வயதில் லுக்கேமியா எனப்படும் இரத்தப் புற்று நோயால் அவதிப்பட்டு வந்த ரோமானியாவின் முன்னாள் மன்னர் King Michael 1, சுவிட்ஸர்லாந்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

Vaud-ல் உள்ள Aubonne பகுதியில் வசித்து வரும் இவர் இரத்தப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது கடந்த ஆண்டு மருத்துவ சோதனையின் மூலம் கண்டறியப்பட்டது.

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் நெருங்கிய உறவினரான இவர் இரண்டாம் உலகப் போரில் பங்குபெற்ற தற்போது உயிரோடுள்ள மன்னர்களில் முக்கியமானவராக கருதப்பட்டார்.

லண்டனில் நடந்த இரண்டம் எலிசபெத் மகாராணி- எய்டன்பர்க் டியூக் தம்பதியின் திருமணத்தில் சந்தித்த Anne என்பவரை 1948-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

1927-1930 மற்றும் 1940-1947 போன்ற இருவேறு காலக்கட்டங்களில் அரசராக இருந்த இவர் பாசிச ஆட்சியாளர் ஆண்டென்ஸ்குவை வெளியேற்றியது மற்றும் 1944-ஆம் ஆண்டில் கூட்டாளிகளுடன் சேர்ந்து நாசிஸ்ட் கூட்டணியில் நாட்டை இணைத்தது போன்ற செயல்களுக்கு இன்றளவும் அறியப்படுகிறார்.

1947- ஆம் ஆண்டு கம்யூனிசவாதிகள் சிலரால் இராஜினாமா செய்யவைக்கப்பட்ட இவர், பின்னர் நாடு கடத்தப்பட்டார்.

அதற்கு பின் நாடு திரும்ப அனுமதிக்கப்படாத இவர் சுவிட்சர்லாந்தில் தொழில் செய்து தனது 5 வாரிசுகளுடன் வசித்து வந்தார்.

1989-ஆம் ஆண்டு கம்யூனிச ஆட்சியாளர் Ceausescu -வின் மறைவிற்கு பின்னரும், இவர் ரோமானியா நாட்டிற்குள் நுழைவதற்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வந்தாலும் இறுதியில் குடியுரிமை மீண்டும் வழங்கப்பட்டது.

கடந்த 2016- ஆம் ஆண்டு இவரது மனைவி மறைந்தபோது நடந்த இறுதிச்சடங்கில் கூட உடல்நிலை காரணமாக இவரால் பங்குபெறமுடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதியாக கடந்த மார்ச் மாதம் முதல் பொது வாழ்க்கையில் இருந்து விலகியவர், மூத்த மகளான Margareta-விடம் பொறுப்புகளை ஒப்படைத்தார்.

இந்நிலையில் நோயின் தீவிரம் அதிகமானதால் நேற்று(5/12/2017), சுவிட்சர்லாந்தில் உள்ள அவரது இல்லத்தில் உயிர் பிரிந்தது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்