10,000 அடி உயரத்தில் உட்கார்ந்து உணவு சாப்பிட சூப்பர் வாய்ப்பு: எங்கு தெரியுமா?

Report Print Raju Raju in சுவிற்சர்லாந்து
233Shares
233Shares
ibctamil.com

சுவிஸின் மிக உயரமான மலைப்பகுதியின் மீது அமைந்துள்ள ரிசார்ட் நகரத்திலிருந்து அருகிலிருக்கும் மலைகளை ஹெலிகாப்டரில் சுற்றி பார்க்கவும், பனிப்பாறையில் உட்கார்ந்து சாப்பிடவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் பெர்னீஸ் ஹைலாந்து பகுதியில் உள்ள 10,000 அடி உயரமான மலைப்பகுயில் கிஸ்டாட் என்னும் ரிசார்ட் நகரம் அமைந்துள்ளது.

இது ஒரு சுற்றுலா தளமாகும், இங்கு விலையுயர்ந்த ஹொட்டல் கூட உள்ளது, தற்போது குளிர்காலத்தையொட்டி சிறப்பு சலுகை இங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இங்கு வருபவர்கள் ஹெலிகாப்டர் மூலம் 60 நிமிடங்கள் சுற்றியுள்ள மலைகளுக்கு பாதுகாப்பாக அழைத்து செல்லப்படுவார்கள்.

திறமையான விமானிகள் தான் ஹெலிகாப்டரை இயக்குவார்கள்.

ஹெலிகாப்டரில் ஏறிய பின்னர் பயணிகளுக்கு ஷாம்பெயின் என்னும் மது வழங்கப்படுகிறது. சுற்றி பார்த்து திரும்பிய பின்னர் பனிப்பாறையின் மீது உட்கார்ந்து கொண்டே உணவருந்தும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

தேங்காய் எண்ணெய் மற்றும் வறுத்த உருளைக்கிழங்கைக் கொண்ட உணவுகள் மற்றும் சீஸ் உணவு வகைகள் தரப்படுகின்றன.

உணவுகள் அனைத்தும் மர அடுப்பில் தயாரிக்கப்படுகின்றன. நீராவி குளியல் போன்ற குளிருக்கு இதமான விடயங்களும் இங்கு மேற்கொள்ளப்படுகின்றன.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்