படிக்கட்டில் எளிதாக ஏறும் சக்கர நாற்காலியை கண்டுப்பிடித்த மாணவர்கள்: ஆச்சரிய வீடியோ

Report Print Raju Raju in சுவிற்சர்லாந்து
465Shares
465Shares
ibctamil.com

படிக்கட்டில் எளிதாகவும், பாதுகாப்பாகவும் ஏறக்கூடிய சக்கர நாற்காலியை சுவிஸ் மாணவர்கள் கண்டுப்பிடித்துள்ளனர்.

சுவிஸில் பொறியியல் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் தான் இந்த அபார செயலை செய்துள்ளனர்.

இந்த சக்கர நாற்காலிக்கு Scewo என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது மின்னணு முறையில் செயல்படுகிறது.

நாற்காலியானது 34 டிகிரி அளவு கொண்ட படிக்கட்டுகள் வரை எளிதாக ஏறும் முறையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதை பயன்படுத்துபவர்கள் கை அருகிலேயே ஜாய் ஸ்டிக் கண்ட்ரோல் இருக்கும், அதை அவர்கள் இந்த திசை நோக்கி சக்கர நாற்காலி பயணிக்க வேண்டுமோ அப்படி இயக்கலாம்.

படியில் ஏறும் போது ரப்பர் டயர் உதவியுடன் நாற்காலி செயல்படுகிறது. Scewo சக்கர நாற்காலியை அடுத்தாண்டு சந்தையில் விற்பனைக்கு கொண்டு மாணவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இது நிச்சயம் மாற்று திறனாளிகளுக்கு வரப்பிரசாதமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்