ஜெனிவாவின் தெருவில் பெண் சுட்டுக்கொலை!

Report Print Deepthi Deepthi in சுவிற்சர்லாந்து

ஜெனிவாவில் 36 வயது பெண் ஒருவர் தெருவில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதன்கிழமை(22/11/2017) அன்று அதிகாலையில் Grottes பகுதியில் உள்ள தெருவில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது என Rue Baudit காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் 3 முறை சுடப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பெண்ணை மீட்டு ஜெனிவா பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

ஆனால், மருத்துவமனையில அனுமதித்த சில மணிநேரத்திலேயே அவர் இறந்துவிட்டதாக பொது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து காவல்துறை விசாரணையை தொடங்கியுள்ள நிலையில், சம்பவம் நடந்த இடத்திற்கு மிக அருகில் வசித்து வந்த 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவரும், இறந்துபோன பெண்மணியும் நண்பர்களாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்ட நிலையில், மறு தரப்பினர் இவர்கள் நண்பர்கள் கிடையாது என மறுத்துள்ளனர்.

மேலும் அவர்கள் இருவருக்கும் ஒருவரை ஒருவர் தெரியாது என்றும், பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக ஏதோ வாக்குவாதம் நடந்ததாகவும் அப்பகுதியில் வசித்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வரும் நிலையில் வேறு எந்த தகவலும் தெரிவிக்க முடியாது என பொது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்