மர்மமான முறையில் கொல்லப்பட்ட தம்பதியர்

Report Print Deepthi Deepthi in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் வயதான தம்பதியர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளது குறித்து பொலிசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

பெர்ன் நகரில் 65 வயதுடைய நபர் தனது மனைவி(61) மற்றும் 23 வயது மகளுடன் வசித்து வந்துள்ளார்.

இவர் தீயணைப்பு வீரராக இருந்து ஓய்வு பெற்றவர் ஆவார், இவர்கள் இருவரும் தங்கள் அறையில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளனர்.

கொலை நள்ளிரவில் நடந்துள்ளது என்றும் காலையில் இருந்து நாய் குரைத்துக்கொண்டே இருந்தது என அருகில் வசித்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

எதற்காக தம்பதியர் கொலை செய்யப்பட்டனர் என்றும் இதன் பின்னணியில் இருக்கும் மர்மநபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...