ஐந்தில் ஒரு சுவிஸ்வாசிக்கு இந்த பிரச்சனைக்கு இருக்காம்: என்ன அது?

Report Print Raju Raju in சுவிற்சர்லாந்து

எதிர்பாராத செலவுகளை திடீரென சமாளிக்க முடியாமல் ஐந்தில் ஒருவர் சுவிஸில் தவிக்கிறார்கள் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

சுவிஸ்வாசிகளின் வருமானம் மற்றும் வாழ்க்கை நிலை பற்றிய ஆய்வை Federal Statistical Office அலுவலகம் நடத்தியது.

இதன் முடிவில், கடந்த ஆண்டு 21.5% மக்கள் திடீரென ஒரு மாதத்துக்குள் செலுத்த வேண்டிய $2,518 என்ற அளவிலான சராசரி தொகையை செலுத்தாமல் இருந்தது தெரியவந்துள்ளது.

வேலையில்லாமல் உள்ளவர்கள், கணவன் அல்லது மனைவி இல்லாமல் தனியாக வாழ்பவர்கள், ஐரோப்பாவை தவிர்த்து வேறு நாடுகளிலிருந்து சுவிஸில் குடியேறியவர்கள் தான் திடீர் செலவுகளை சமாளிக்க முடியாமல் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதே போல, கடந்த ஆண்டு 8.9% சுவிஸ்வாசிகள் தங்கள் விடுமுறையை வேறு இடங்களுக்கு சென்று கழிக்காமல் சொந்த இடத்திலேயே கழித்துள்ளனர்.

இதில் இத்தாலி (45%), பிரான்ஸ் (23%), ஜேர்மனி (18%) மக்கள் முன்னிலையில் உள்ளனர்.

வறுமை காரணமாக நிரந்தர ஆபத்து ஏற்படும் நிலையில் 6.9% சுவிஸ்வாசிகள் இருப்பது தெரியவந்துள்ளது.

ஆனாலும், ஸ்பெயின் (15%), ஜேர்மனி (10.5%), ஆஸ்திரியாவை (8%) விட சுவிஸில் இது குறைவாகவே உள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...