சுவிஸில் வளர்க்கப்படும் நாய்கள் மற்றும் பூனைகள் குறித்து முக்கிய தகவல்

Report Print Raju Raju in சுவிற்சர்லாந்து

சுவிஸில் 40 சதவீதம் வரை பூனைகள் மற்றும் நாய்கள் மிகவும் குண்டாக உள்ளது தெரியவந்துள்ளது.

சுவிஸில் கால்நடைகளை மக்கள் விரும்பி வளர்த்து வருகிறார்கள், முக்கியமாக பூனைகள் அங்கு மிக பிரபலமாகும்.

இந்நிலையில், நாட்டில் வாழும் கால்நடைகளில் 20லிருந்து 40 சதவீதம் மிகவும் குண்டாக உள்ளதாக கால்நடை மருத்துவர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதிகமாக சாப்பிடுவது, நடைப்பயிற்சி இல்லாமல் இருப்பது தான் இதற்கு காரணம் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

இதில் அதிகமாக பாதிக்கப்படும் விலங்கு பூனைகள் தான், வீட்டில் வளர்க்கப்படும் பூனைகள் அதிகமாக எங்கும் அலையாமல் இருக்கும் நிலையில் அது இருக்கும் இடத்துக்கே உணவுகள் வந்துவிடுவது உடல் பருமனுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

தினமும் வெவேறு இடங்களில் உணவுகளை வைப்பது, அதை கொஞ்ச தூரமாவது நடக்க வைப்பது போன்றவை அதிக உடல் எடை பிரச்சனைக்கு தீர்வாக இருக்கும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

சுவிஸ் வீடுகளில் வளர்க்கப்படும் கால்நடைகள் சலித்து கொள்ளாமல் புத்துணர்ச்சியோடு இருக்க ஒரு வீடுகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட கால்நடைகளை வளர்க்கலாம் என ஜூரிச் விலங்குகள் பாதுகாப்பு சங்கம் தெரிவித்துள்ளது.

இப்படி வளர்ப்பதால் ஒன்றுக்கு ஒன்று தோழமையாக இருக்கும்.

சுவிஸ் விலங்கு பாதுகாப்பு சட்டங்கள் படி ஒரே ஒரு பூனையை மட்டும் ஒரு வீட்டில் வளர்த்தால் அதை எப்போதும் வீட்டின் உள்ளேயே வைத்திருக்க கூடாது, வாரத்தில் ஐந்து நாட்களாவது வெளியில் பூனையை அழைத்து செல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...