சூடானில் கடத்தப்பட்ட சுவிஸ் சமூக சேவகி விடுவிப்பு

Report Print Kabilan in சுவிற்சர்லாந்து

உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள சூடான் நாட்டில் மர்ம நபர்களால் கடத்தப்பட்ட சுவிஸை சேர்ந்த சமூக சேவகி ஒருவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சூடான் நாடு உள்நாட்டுப் போரினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவம் உள்ளிட்ட உதவிகளை செய்வதற்காக பல நாடுகளை சேர்ந்த சமூக சேவகர்கள் அங்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில், சுவிட்சர்லாந்தை சேர்ந்த பெண் ஒருவர், சூடானில் உள்ள பஷீர் நகரில் குழந்தைகளுக்கு தேவையான உதவிகளை செய்தவாறு சில ஆண்டுகளாக அங்கு வசித்து வருகிறார்.

கடந்த மாதம் 8ஆம் திகதி அடையாளம் தெரியாத மர்ம நபர்களால், அந்த பெண் கடத்தப்பட்டிருக்கிறார்.

குறித்தப் பெண்ணின் பெயர், வயது தொடர்பான விவரங்கள் எதுவும் தெரியாத நிலையில், அவரை மீட்கும் நடவடிக்கையில் சூடான் மற்றும் சுவிஸ் நாட்டைச் சேர்ந்த அதிகாரிகள் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், குறித்த சமூக சேவகி விடுவிக்கப்பட்டதாகவும், பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் வடக்கு டர்பர் மாநில துணை கவர்னர் முஹம்மது பாரிமா தெரிவித்துள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers