ஜிம்பாப்வே பிரச்சனை: சுவிஸ் குடிமகன்களுக்கு முக்கிய அறிவிப்பு

Report Print Raju Raju in சுவிற்சர்லாந்து

ஜிம்பாப்வேயில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில் அங்கு பயணம் மேற்கொண்டிருக்கும் சுவிஸ் குடிமகன்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஜிம்பாப்வேயின் தலைநகர் ஹராரேவை ராணுவம் கைப்பற்றியதோடு அந்நாட்டின் ஜனாதிபதியான ராபர்ட் முகாபே கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சுவிஸில் வெளியுறவு துறை முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், ஹராரேவில் தற்சமயம் இருக்கும் சுவிஸ் குடிமகன்கள் பாதுகாப்பான இடத்தில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜிம்பாப்வேயின் மற்ற பகுதிகளில் இருக்கும் சுவிஸ் குடிமகன்களும் பாதுகாப்பாக இருப்பதோடு, தேவையில்லாத பட்சத்தில் வெளியில் செல்வதை தவிர்க்க கோரப்பட்டுள்ளது.

மீடியா மூலம் நிலவரத்தை அறிந்து கொள்ளும்படியும் உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களுக்கு இணங்க செயல்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதோடு சுவிஸ்க்கு செல்லும் விமானங்கள் குறித்து கேட்டறிய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

300-க்கும் மேற்பட்ட சுவிஸ் குடிமக்கள் ஹராரேவின் சுவிஸ் தூதரகத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளனர் என்பதும், ஜிம்பாப்வே சுற்றுலா ஆணையம் அறிக்கைப்படி கடந்தாண்டு 7,717 சுவிஸ்வாசிகள் அந்நாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்றதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers