ஏலம் விடப்பட்ட உலகின் மிகப்பெரிய வைரம்: எத்தனை மில்லியன் டொலர் தெரியுமா?

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
196Shares
196Shares
ibctamil.com

உலகிலேயே மிகப்பெரிய வைரம் சுவிட்சர்லாந்து நாட்டில் 33.5 மில்லியன் டொலருக்கு ஏலமிடப்பட்டது.

சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் 163.41 காரட் வைரம் இன்று ஏலத்திற்கு வந்தது. ஏலமிடப்படும் உலகின் மிகப்பெரிய மாசற்ற வைரம் இதுவாகும்.

இந்த வைரம் சுமார் 25 மில்லியன் டொலருக்கு ஏலத்தில் விலை போகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 33.5 மில்லியன் டொலருக்கு ஏலத்தில் விலை போனது.

இருப்பினும் இதன் இருமடங்கு விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டிருக்கலாம் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மத்திய ஆப்ரிக்காவின் அங்கோலாவில் 2016ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட இந்த வைரம் வெள்ளை நிறத்தில் உள்ளது. அமெரிக்காவின் பிரபலமான 10 வைரத்தை வெட்டும் கலைஞர்கள் இதனை அழகாக வடிவமைத்துள்ளனர்.

மட்டுமின்றி ஆர்ட் ஆஃப் கிரிசோகோனோ (Art of Grisogono) என்ற ஆடம்பர நெக்லசில் இந்த வைரம் பதிக்கப்பட்டிருந்தது.

இந்த ஆடம்பர நெக்லசை வடிவமைக்க மொத்தம் 1,700 மணி நேரம் செலவிடப்பட்டு 14 கலைஞர்களால் செய்து முடிக்கப்பட்டது.

தற்போது, இது தனியே எடுக்கப்பட்டு ஏலத்தில் விடப்பட்டது. ஜெனிவாவில் உள்ள கிறிஸ்டி ஏல நிறுவனத்தில் இந்த வைரத்தை ஏலம் விடப்பட்டது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்