மனைவியை கொல்ல முயன்ற பாதிரியார்: 7 ஆண்டுகள் சிறை விதித்த நீதிமன்றம்

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து
183Shares
183Shares
ibctamil.com

சுவிட்சர்லாந்து நாட்டில் மனைவியை கொலை செய்ய முயன்ற பாதிரியாருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

சுவிஸில் உள்ள சூரிச் நகரில் எரித்ரியா நாட்டை சேர்ந்த 32 வயதான நபர் பாதிரியாராக பணிபுரிந்து வந்துள்ளார்.

மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் சில நாட்கள் அவர் உறவினர் வீட்டில் தங்கி வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்தாண்டு நவம்பர் மாதம் மனைவியை பாதிரியார் சந்தித்தபோது இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

மனைவியின் இழிச்சொற்களை கேட்டு ஆத்திரம் அடைந்த பாதிரியார் அவரது கழுத்தை பிடித்து இறுக்கியுள்ளார்.

கணவரின் பிடியை தாங்க முடியாத மனைவி ஒரு கட்டத்தில் நினைவிழந்து மயங்கி விழுந்துள்ளார்.

இச்சம்பவத்திற்கு பின்னர் மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து பாதிரியார் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கின் இறுதி விசாரணை நேற்று நீதிமன்றத்திற்கு வந்தபோது மனைவியை கொலை செய்ய முயன்றது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது.

எனவே, மனைவியை கொல்ல முயன்ற குற்றத்திற்காக பாதிரியாருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதாக நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

மேலும், தண்டனை காலம் முடிந்ததும் தாய் நாட்டிற்கு அவரை திருப்பி அனுப்ப வேண்டும் எனவும், அடுத்த 10 ஆண்டுகளுக்கு சுவிட்சர்லாந்து நாட்டில் நுழைய தடை விதிப்பதாக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்