மதுபோதையில் கார் ஓட்டியபோது நிகழ்ந்த விபத்து: ஓட்டுனர் பலி

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்து நாட்டில் மது போதையில் கார் ஓட்டிய நபர் ஒருவர் மற்றொரு நபர் மீது மோதி உயிர்ழப்பை ஏற்படுத்திய குற்றத்திற்காக பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுவிஸின் டிசினோ மாகாணத்தில் உள்ள Sigirino என்ற நகரில் தான் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நேற்று மாலை நேரத்தில் 36 வயதான நபர் ஒருவர் காரில் பயணம் செய்துள்ளார்.

ஏ-2 நெடுஞ்சாலையில் பயணம் செய்தபோது அவர் குறிப்பிட்ட வேகத்தை விட அதிகமாக சென்றதால் பொலிசார் துரத்தியுள்ளனர்.

ஆனால், பொலிசாரை கவனிக்காத அந்த ஓட்டுனர் அசுர வேகத்தில் காரை ஓட்டியுள்ளார்.

சில நிமிடங்களுக்கு பின்னர் சாலையில் சென்றுக்கொண்டு இருந்த மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியுள்ளார்.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற 36 வயதான நபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

காரை துரத்தி வந்த பொலிசார் ஓட்டுனரை பரிசோதனை செய்தபோது அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், மோட்டார் சைக்கிள் மீது கார் வேண்டுமென்றே மோதி விபத்து ஏற்படுத்தியதாகவும் பொலிசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.

இச்சம்பவத்தை தொடர்ந்து ஓட்டுனர் மீது பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers