தன் மகளை காலால் நசுக்கி கொன்ற தந்தை

Report Print Kabilan in சுவிற்சர்லாந்து
400Shares

சுவிஸின் Wagenhausen பகுதியில் கடந்த ஆண்டு நடந்த கொடூர கொலைச் சம்பவத்தின் பின்னணி தற்போது தெரிய வந்துள்ளது.

சுவிஸில் வெனிஸா என்னும் பெண் மர்மமான முறையில் தனது தந்தையால் கொலை செய்யப்பட்டார்.

அந்த கொலைச் சம்பவம் குறித்து அப்பெண்ணின் காதலன் தற்போது வெளியிட்டுள்ள தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெனிஸாவின் காதலன் குர்ட் கூறுகையில், கடந்த ஆண்டு புத்தாண்டை கொண்டாட நான், வெனிஸாவும் மற்றும் அவரது தந்தை மூவரும் முடிவு செய்திருந்தோம்.

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தனது தந்தையை சந்திக்கும் ஆர்வத்தில் வெனிஸா இருந்தாள்.

தனது குறுகிய மனபான்மையால் வெனிஸாவின் தாய் அவருடன் வாழ மறுத்து சென்று விட்டதால், அவளது தந்தை இரண்டு ஆண்டுகளாக தனிமையில் இருந்துள்ளார்.

எனவே தான், இந்த புத்தாண்டை அவருடன் சேர்ந்து அவரது அடுக்குமாடி குடியிருப்பில் கொண்டாட வேண்டுமென அவள் கூறியிருந்தாள்.

குறித்த நாளில் நான் அங்கு சென்று பார்த்த போது, வெனிஸா இறந்த நிலையில் தரையில் கிடந்தாள். அவளின் தந்தை அருகில் இருந்தார்.

அவளது உதடுகள் நீல நிறத்திலும், உடல் வெளிர் நிறமாகவும் மாறியிருந்தது. அவளது வயிற்றுப்பகுதியில் ஏற்பட்ட அதிகபடியான அழுத்ததின் காரணமாக அவள் இறந்திருக்கலாம்.

அதாவது, வெனிஸாவின் தந்தை ‘தாய் மசாஜ்’ செய்வது போல அவளின் வயிற்றின் மேல் ஏறி நின்றிருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது, கொலையாளியான வெனிஸாவின் தந்தை சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்