ஜெனிவா பேராசிரியர் மீது குவியும் பாலியல் புகார்: அம்பலப்படுத்திய 4 சுவிஸ் பெண்கள்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் இஸ்லாமிய பேராசிரியர் ஒருவர் இளம்பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக கூறி புகார் எழுந்துள்ளது.

சுவிட்சர்லாந்தின் ஜெனிவா பகுதியைச் சேர்ந்த இஸ்லாம் தொடர்பான பேராசிரியர் Tariq Ramadan என்பவர் மீதே பல பெண்கள் பாலியல் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளனர்.

ஆனால் குறித்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் மறுத்துள்ள பேராசிரியர் ரமதான், தம் மீது பழி போடும் அனைவர் மீது அவதூறு வழக்கு தொடர இருப்பதாகவும் எச்சரித்துள்ளார்.

இதுவரை இரண்டு பெண்கள் பேராசிரியர் ரமதான் மீது பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். பல பெண்கள் தங்களும் பேராசிரியர் ரமதானால் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்தவண்ணம் உள்ளனர்.

சாண்ட்ரா என்பவர் தம்முடன் பேராசிரியர் ரமதான் காரில் வைத்து பாலியல் உறவு கொண்டுள்ளதாக வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

அப்போது தமக்கு 15 வயது எனக் கூறும் அவர், தங்களது உறவு என்பது மிக ரகசியமானது எனவும் தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் ரமதான் தம்முடன் மிக கொடூரமாக நடந்து கொண்டதாகவும், அந்த நிகழ்வுக்கு பின்னர் தமது உடல் பாகங்களில் காயம் இருந்தது எனவும், அப்போது தமக்கு 18 வயதே எனவும் அகத்தே தெரிவித்துள்ளார்.

1980 மற்றும் 90களில் பேராசிரியர் ரமதான் பிரஞ்சு மற்றும் தத்துவம் வகுப்புகள் எடுத்துவந்த இரண்டு கல்லூரிகளில் பயின்ற 4 சுவிஸ் பெண்களும் பாலியல் ரீதியாக பாதிப்புக்கு உள்ளானதாக தற்போது வெளிப்படையாக தெரிவித்துள்ளனர்.

பேராசிரியர் ரமதான் மீது முதன்முறையாக பாலியல் புகார் தெரிவித்துள்ளது பிரஞ்சு மகளிர் அமைப்பைச் சேர்ந்த Henda Ayari என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்