விபத்தில் சிக்கிய அகதி: காப்பாற்றிய பொலிஸ்

Report Print Deepthi Deepthi in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் கார் விபத்தில் சிக்கிய அகதி நபர் ஒருவரை பொலிசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

30 வயதுடைய நபர் சூரிச் கால்வாய் எல்லை வழியாக சிவப்பு நிறத்திலான VW Golf காரினை வேகமாக ஓட்டி சென்றுள்ளார், இவரது உடம்பில் ரத்தகாயங்கள் வேறு இருந்துள்ளது.

அதிவேகமாக பயணித்த இவரை பொலிசார் தடுத்த நிறுத்த முயற்சித்த போது இவர் வேகமாக சென்றுள்ளார், சூரிச் பொலிசார் கொடுத்த அடையாளத்தின்படி இவர், Zweidlen சந்திப்பின் பொலிசாரிடம் சிக்கியுள்ளார்.

காரை விட்டு இறங்குமாறு பொலிசார் கூறியவுடன், அதிலிருந்த இந்நபர் வேகமாக இறங்கி தலைதெறிக்க ஒடி அருகில் இருந்த பண்ணைக்குள் ஒளிந்துகொண்டார்.

மோப்பநாயுடன் நின்றிருந்த பொலிசார் அப்பகுதியில் சோதனை நடத்திபோது, தனது உடலில் ஏற்பட்ட தனது காயங்களால் வலியால் துடித்த இந்நபர் மறைந்திருந்த இடத்தில் அழுதுகொண்டிருந்துள்ளார்.

நபர் இருந்த இடத்திற்கு நாய் சென்றதையடுத்து, அந்நபரை பொலிசார் கைது செய்துள்ளனர், மேலும் அவரிடம் இருந்த ஓட்டுநர் உரிமமும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டது.

ஆனால் எதற்காக இவர் பொலிசாரை பார்த்து தப்பி ஓட முயன்றார் என்பதற்கான காரணத்தினை பொலிசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்