பல்வேறு இடங்களில் பற்றியெறிந்த தீ: பல உயிர்கள் பறிபோன பரிதாபம்

Report Print Raju Raju in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் பல்வேறு மண்டலங்களில் உள்ள கட்டிடங்கள் திடீரென தீப்பிடித்து எரிவதும் அதில் பல்வேறு மிருகங்கள் உயிரிழப்பதும் தொடர்கதையாகி வந்தது.

இந்த சம்பவம் அனைத்தையும் செய்தது 22 வயதான இளைஞர் எனவும் அதற்கான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாகவும் Vaud மற்றும் Fribourg மண்டல வழக்கறிஞர்கள் கூறியுள்ளார்.

முதலில் கடந்த யூலை மாதம் 9-ஆம் திகதி Fribourg மண்டலத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு திடீரென தீப்பற்றி எரிந்தது, அதில் பொருட்கள் சேதமடைந்தன.

யூலை 15-ஆம் திகதி Avenches நகராட்சியில் உள்ள தேசிய குதிரையேற்ற மையம் திடீரென தீப்பிடித்தது, இதில் அங்கிருந்த 24 குதிரைகள் உயிரிழந்தன.

பின்னர் யூலை 29-ஆம் திகதி Domdidier மற்றும் Payerne நகராட்சிகளில் உள்ள மாட்டு தொழுவத்தில் நடந்த தீவிபத்தில் 60 காளைகள், பசுக்கள் மற்றும் கன்றுகள் உயிரிழந்தது.

இவை எல்லாவற்றையும் செய்ததாக சந்தேகத்தின் பேரில் 22 வயதான இளைஞர் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் திகதி பொலிசாரால் கைது செய்யப்பட்டார், கைதான நபர் பொலிசாரிடம் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார்.

இதனால் அவர் மன நலம் சரியில்லாதவரா என்பதை அறிய மருத்துவ பரிசோதனை மேற்க்கொள்ளபடவுள்ளதாக கூறப்படுகிறது

குறித்த நபர் தன்னார்வ தீயணைப்பு வீரராக இருந்தவர் என்ற தகவலும் வெளியாகியுள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக அவர் மீது சந்தேகமில்லை என்று பொலிசார் தற்போது நினைப்பதாகவும் இன்னொரு தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்