சுவிட்சர்லாந்தில் தாக்குதல் நடத்திய நபர்: அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது துப்பாக்கியால் தாக்குதல் நடத்திய நபருக்கு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

சுவிட்சர்லாந்தின் St.Gallen பகுதியில் அமைந்துள்ள மசூதியிலையே கடந்த 2014 ஆம் ஆண்டு குறித்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.

இதில் 51 வயது நபர் கொல்லப்பட்டதுடன் சிலர் லேசான காயங்களுடன் தப்பினர்.

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட பொலிசார் 54 வயது நபரை கைது செய்தனர்.

இந்நிலையில் அவர் மீதான குற்றச்சாட்டு சந்தேகமின்றி நிரூபணமானதால் கடந்த 2016 ஆம் ஆண்டு மாவட்ட நீதிமன்றம் அவருக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்த குற்றவாளி தரப்பு வழக்கறிஞர், விதிக்கப்பட்டிருந்த தீர்ப்பையும் தடைகோரினார்.

இந்த நிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், குற்றவாளியின் நடவடிக்கை மிகவும் கொடூரமானதும் திட்டமிடப்பட்டதுமாகையால் தண்டனை காலத்தை குறைக்கும் வாய்ப்பு இல்லை என அழுத்தமாக தெரிவித்துள்ளனர்.

மேலும் 1997 ஆம் ஆண்டு நடந்த கொலை சம்பவம் தொடர்பில் இது பழி தீர்க்கும் நடவடிக்கையாக அமைந்துள்ளதும், பயங்கரவாத தொடர்பு இல்லை என்பதாலும் 16 ஆண்டுகளாக தண்டனை காலத்தை குறைத்துள்ளனர்.

கொலையாளியும் கொல்லப்பட்டவரும் நெருங்கிய நண்பர்கள் மற்றும் ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...