சுவிஸ் ரயில் நிலையங்களில் வரவிருக்கும் தடை

Report Print Kabilan in சுவிற்சர்லாந்து

சுவிஸின் மத்திய ரயில்வே நிர்வாகம் ரயில் நிலையங்களில் புகைப்பிடிப்பதற்கான தடையை கொண்டு வர உள்ளது.

சுவிஸில் ரயில் நிலையத்தில் புகைப்பதற்கு தடை இருந்தாலும் பிளாட்பாரங்களில் புகைப்பதற்கு அனுமதி உள்ளது.

எனவே தான், புகைப்பிடித்தலுக்கு எதிரான முதற்கட்ட நடவடிக்கையாக ஐந்து ரயில் நிலையங்களில் அடுத்த மாதம் முதல் இந்த தடை வர உள்ளது.

Basel, Nyon மற்றும் Zurich Stadelhofen ஆகிய ரயில் நிலையங்களில் புகைப்பிடித்தலை முற்றிலும் தடை செய்யும் வகையில் ஒரு ஆண்டு சோதனை முயற்சியாக இந்த தடை அமலுக்கு வர உள்ளது.

ரயில்வே இயக்குனரே ரயில் நிலையங்களில், புகைப்பதால் உருவாகும் குப்பைகளை சுத்தம் செய்வதற்கான செலவுகளை ஏற்கிறார்.

எனவே, வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி முதல் சோதனை முயற்சியாக இந்த தடை கொண்டுவரப்பட உள்ளது.

இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் சுவிற்சர்லாந்தும். அண்டை நாடுகளான பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஜேர்மனி போல புகையில்லாத ரயில் நிலையங்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் இணையும்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...