கழிவு நீர் வழியாக 43 கிலோ தங்கம் வெளியேறுகிறது: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்து நாட்டில் கழிவு நீர் வழியாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 43 கிலோ தங்கம் வெளிறுவதாக அந்நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

சுவிட்சர்லாந்து நாட்டில் தங்கம் மற்றும் வெள்ளி உலோகங்களை உருக்கும் ஆலைகள் அதிகளவில் உள்ளதால் உலகளவில் உள்ள 70 சதவிகித தங்கம் சுவிட்சர்லாந்து நாட்டிற்கு வந்து செல்கிறது.

இவ்வாறு ஆலைகளில் தங்கம் மற்றும் வெள்ளியை உருக்கும்போது ஏற்படும் சேதங்கள் கழிவு நீர் வழியாக வெளியேறுகிறது.

கழிவு நீரை பரிசோதனை செய்ததில் அவற்றில் தங்கம் மற்றும் வெள்ளி கழிவுகள் கலக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுக் குறித்து விரிவாக விசாரணை நடத்தியதில் சுவிஸ் கழிவு நீர் வழியாக ஒவ்வொரு ஆண்டும் 43 கிலோ எடை கொண்ட தங்கம் வெளியேறுகிறது.

இதன் மதிப்பு சுமார் 2 மில்லியன் டொலர் ஆகும்.

அதே சமயம், ஒவ்வொரு ஆண்டும் கழிவு நீர் வழியாக சுமார் 3,000 எடையுள்ள வெள்ளி வெளியேறுகிறது. இதன் மதிப்பு 1.7 மில்லியன் ஆகும்.

சுவிஸ் முழுவதும் உள்ள 64 உருக்கு ஆலைகளை மேற்கொண்ட ஆய்வில் இத்தகவல்கள் வெளியாகியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers